Language :     Englishதமிழ்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்!

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் பெங்களூரில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை, போலி தேசபக்தியாளர்களுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் சுயேட்சையாக இருப்பதால் மக்களுடனான தொடர்பில் சில இடைவௌிகள் காணப்படக்கூடும் எனக் கருதுவதால் விரைவில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் முழுதும் பயணிக்க கிடைத்த தனக்கு குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சிணைகளுக்காக குரல் கொடுக்க முடியுமானதாகவும் அதனை தொடர்ந்து மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் தொடர்ந்து தான் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் அதில் கிடைக்கும் பணத்தை அரசியலுக்காக செலவழிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனது புதிய கட்சியூடாக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் எனவும் நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>NF

(Date: 28.05.2019)

You may also like ...

வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை!

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம

பயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!

Zoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே

Government Jobs

Feed not found.

புதிய தொகுப்புகள்