எதிர்வரும் 28ஆம் திகதி தி.மு.கவின் பதவியேற்பு!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 தி.மு.க., எம்.எல்.ஏக்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவியேற்க உள்ளனர்.​

தமிழகத்தில் வெற்றிடமாகிய 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதியும் மேலும் 4 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் திகதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் திகதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து எண்ணப்பட்டன.

இதில் அதிமுக 9 இடங்களிலும் தி.மு.க. 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. வெற்றிகொண்ட இந்த 9 எம்.எல்.ஏக்களையும் சேர்த்து அவர்களுக்கு தற்போது 123 பேர் இருக்கின்றனர்.

தி.மு.க. அண்மையில் வெற்றி பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்களோடு சேர்த்து 101 எம்.எல்.ஏக்களை தன்பக்கம் கொண்டுள்ளது. கூட்டணி கட்சியினரோடு சேர்த்து 109 பேர் உள்ளனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளனர்.

கட்சியின் தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>NF

(Date: 28.05.2019)

You may also like ...

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு!

தெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா

புதிய தொகுப்புகள்