இப்படியும் ஒரு பிரதமர...!

என்னதான் நடந்தாலும் ஆடாமல் அசையாமல் அப்படியே பதவியில் இருக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் இடிந்து 54 பேர் பலியான சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஒரு நாட்டின் பிரதமர் பதவி விலகியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்திருப்பது லாட்வியாவில். அந்தப் பிரதமரின் பெயர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ். ரிகா நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் இடிந்து தரை மட்டமானது. இதில் 54 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து சர்ச்சை எழுந்தது

இந்த நிலையில், வால்டிஸ், நேராக ஜனாதிபதியை சந்தித்து தான் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்பதாக கூறி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு போய் விட்டார்.
பிரதமரே பதவி விலகி விட்டதால் அடுத்து நாட்டில் தேர்தலை நடத்த ஜனாதிபதி உத்தரவிடுவார் என்று தெரிகிறது. பிரதமர் திடீரென விலகி விட்டது லாட்வியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்வியா நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் பிரதமர் பதவி விலகியு்ள்ளதால் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like ...

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்!

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்!

கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,

புதிய தொகுப்புகள்