பாகிஸ்தானில் மிகப்பெரிய அணுமின்சக்தித் திட்டம் ஆரம்பம்

பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அந்நாட்டில் மிகப்பெரிய அணுசக்தித் திட்டத்தினைத் தொடக்கிவைத்தார். தலைநகர் கராச்சியிலிருந்து 40கி.மீ தொலைவு மேற்கில் அரேபியக் கடற்பகுதியில் அமைந்துள்ள பாரடைஸ் பீச் என்ற இடத்தில் 2,200 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலை ஒன்று சீனத் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட உள்ளது.

பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று அணுமின் உலைகள் மொத்தம் 740 மெகாவாட் திறனை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. நான்காவதாக ஒரு திட்டமும் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

இத்திட்டங்களின் செயல்பாடுகள் மூலம் பாகிஸ்தானில் எந்த நாளும் பிரச்சினையைத் தரும் மின்வெட்டிற்குத் தீர்வு காணமுடியும் என்று அந்நாட்டு அரசு எண்ணுகின்றது.

நிர்வாக சீர்கேடு, ஊழல் மற்றும் விலையுயர்ந்த இறக்குமதி எரிபொருட்கள் போன்றவை அந்நாட்டின் எரிசக்தித்துறையை மிகவும் பற்றாக்குறையில் கொண்டு விட்டுள்ளன. இதன் விளைவாக கோடைக்காலங்களில் பாகிஸ்தான் மக்கள் மிக நீண்ட மின்வெட்டுகளை அனுபவிக்க நேரிடுகின்றது.

இத்தகைய பற்றாக்குறைகளை நீக்கும் லட்சியத்தின் முதல் படி இந்தத் திட்டம் என்று நவாஸ் ஷெரிப் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும், அந்நாட்டின் ஆற்றல் உற்பத்தியை 40,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் தனது நீண்டகாலத்திட்டங்கள் குறித்தும் அவர் உறுதியளித்தார்.

உலக அணுசக்தி சங்கம் இந்தப் புதிய திட்டத்திற்கு 10 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் பொறியாளர்கள் சீனா அணுசக்தி அதிகார உதவியுடன் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவார்கள்.

பாகிஸ்தான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் உறுப்பினர் இல்லை என்பதால் அந்நாடு அணுசக்திப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

அதனால், அவர்களுடைய அண்டை நாடான சீனாவின் உதவியை மட்டுமே அவர்கள் பெறமுடியும். இந்தப் புதிய அணுசக்தித் திட்டத்திற்கு அருகிலேயே பலுசிஸ்தான் மாகாணத்தின் கடாபி கடற்கரைப் பகுதியில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு 6,600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி பூங்கா எனப்படும் மின்திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

You may also like ...

வாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி!

ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு

இலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண

புதிய தொகுப்புகள்