ஜப்பானிய இளவரசர் நருஹிட்டோ (Naruhito), அந்நாட்டு முடிக்குரிய அரசராக பொறுப்பேற்றுள்ளார்.
85 வயதான ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ, நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
இதனையடுத்து, இளவரசர் நருஹிட்டோ அந்நாட்டு முடிக்குரிய மன்னராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று (முதலாம் திகதி) காலை, 59 வயதான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ, மன்னர் பரம்பரை பொக்கிஷங்களான, பாரம்பரிய வாள், புனித அணிகலன்களைப் பெற்று, நாட்டின், 126ஆவது மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானிய மன்னர்களுக்கு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாதநிலையில், அவர்கள் தேசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
(Date: 01.05.2019)