Language :     Englishதமிழ்

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜப்பானிய பேரரசர்!

இன்றுடன் (30ஆம் திகதி) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito) ஓய்வு பெறுகின்றார்.

85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.

இந்தநிலையில், முதுமை காரணமாக தன்னுடைய கடமைகளை சரிவர கொண்டுசெல்ல முடியாதுபோகும் என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ, 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அவரது விருப்பப்படி, இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், பேரரசர் அகிஹிட்டோவின் மகனான இளவரசர் நருஹிட்டோ (Naruhito) நாட்டின் அடுத்த மன்னராகப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய பேரரசர் அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்காத நிலையில், தேசத்தின் சின்னமாக சேவை செய்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

(Date: 30.04.2019)

You may also like ...

தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு!

நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழா இன

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக சொலமன் மிரே அறிவிப்பு!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸிம்பாப்வே

புதிய தொகுப்புகள்