×

Error

There was a problem loading image rocat%201.jpg

அமெரிக்கா உட்பட 6 நாடுகளுடன் உடன்பாடு ஈரான் அணுஆயுத திட்டம் முடக்கம்

ஈரானுடன் உலகின் 6 முக்கிய வல்லரசுகளால் நேற்று ஜெனீவாவில் எட்டப் பட்ட அணுசக்தி இணக்க ஒப்பந்தம் காரணமாக மத்திய கிழக்கில் தோன்றலாம் என அஞ்சப் படும் யுத்தம் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் களையப் பட்டிருப்பதாகவே கூற வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் போது ஈரான் மீது விதிக்கப் பட்ட சில பொருளாதாரத் தடைகள் ஒவ்வொன்றாக நீக்கப் படுவதற்கான சமரசமௌம் மேற்கொள்ளப் பட்டது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் ஓர் வல்லமை மிக்க அணுகுண்டை ஈரான் தயாரிப்பதற்கான வழிகள் யாவும் இதன் மூலம் அடைக்கப் பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆயினும் இஸ்ரேல் பிரதமர் இந்த ஒப்பந்தம் குறித்து இது ஒரு வரலாற்றுத் தவறு எனும் எதிர்மறையான கருத்தையே தெரிவித்துள்ளார். ஈரான் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கூறுகையில் உண்மையில் சக்தி வாய்ந்த அணுவாயுதங்கள் தமக்குத் தேவைப்படாது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் ஈரான் அதிகாரிகளுடன் உலகின் முக்கிய வல்லரசுகளான P5+1 நாடுகள் அதாவது அமெரிக்கா,பிரிட்டன்,சீனா,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை தொடர்ந்து 4 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் எட்டப் பட்ட இந்த ஒப்பந்தத்தை இந்த அனைத்து நாடுகளும் தமக்குக் கிடைத்த வெற்றி என வரவேற்றுள்ளன. ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதொல்லா அலி கமேனி முன்னர் இவ்வாறான ஒப்பந்தம் எட்டப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை!

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப

புதிய தொகுப்புகள்