இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று முந்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

கவுதம் காம்பீர் தனக்கு 147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 2017/18 ஆம் ஆண்டு மட்டும் தனக்கு 12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவிக்கு 6.17 இலட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு 24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு 4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு 20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.

தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் 1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி 18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் நிஜாமுதின் பகுதியில் 1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Date: 25.04.2019)

You may also like ...

அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி!

அவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும

இந்தியாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை!

இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமா

புதிய தொகுப்புகள்