30 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் மீட்பு

லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் அடிமைகளாக இருந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் மலேசியாவை சேர்ந்த 69 வயது பெண், அயர்லாந்தை சேர்ந்த 57 வயது பெண் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஆகியோர் அடிமைகளாக இருந்துள்ளனர்.

அடிமைகளாக நடத்தப் பட்ட 3 பெண்களை போலீஸ் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் மீட்டுள்ளனர். அப்பெண்களை அடிமைகளாக நடத்திய குற்றத்திற்காக சுமார் 67 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லாம்பெத் என்ற இடத்தில் இருந்து தன்னார்வ தொண்டு அமைப்புக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய பெண் அழுதுகொண்டே, தானும் தன்னைப்போல் மேலும் இரண்டு பெண்களும் அடிமைகளாக சித்ரவதைப் படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண் பேசிய தொலைபேசி எண்ணின் உரிமையாளர் வீட்டிற்கு போலீசாரின் துணையுடன் சென்ற தொண்டு நிறுவனத்தார், வீட்டை தீவிர சோதனை மேற்கொண்டு அவர்களை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் வசித்த மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் மூன்று பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது குறித்து அக்கம்பக்கத்தினர் யாருக்கும் எதுவுமே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிர

30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத

புதிய தொகுப்புகள்