பின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்

2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அப்போட்டாபாத் பகுதியில் அமெரிக்கப் படைகளால் சுற்றி வளைக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

பின்லேடன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டு பிடிப்பதற்கு அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு உதவியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷகில் அஃப்ரிடி எனும் மருத்துவர் ஆவார்.

இவர் மீது சமீபத்தில் பாகிஸ்தான் நீதிமன்றம் கொலைக் குற்றம் சுமத்தி கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. 8 வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு கைபர் ஏஜன்ஸி பகுதியில் தனது மகன் மரணமடைந்ததற்கு ஒரு சர்ஜனாக ஆக முதல் சிகிச்சை அளித்த ஷகில் அஃப்ரிடியே காரணம் என ஒரு பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை இந்த டாக்டரின் வழக்கறிஞர் சமியுல்லா அஃப்ரிடியும் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே டாக்டர் அஃப்ரிடி தடை செய்யப் பட்ட தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 33 வருட சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப் பட்டு பின்னர் ஆகஸ்ட்டில் இத்தீர்ப்பு ரத்து செய்யப் பட்டிருந்தது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடிய விதம் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்தது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

You may also like ...

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு!

மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவ

பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்!

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்

புதிய தொகுப்புகள்