பாகிஸ்தானில் அமெரிக்காவின் ‘ட்ரோன்’ தாக்குதல் தொடர்கின்றது

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் உள்ள மலையிடங்களில் எல்லாம் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அவர்களை ஒடுக்க அமெரிக்காவே நேரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அது தீட்டிய திட்டம் தான் ட்ரோன் தாக்குதல். ஆளில்லா விமானங்களை அனுப்பி செயற்கைகோள் உதவியுடன் துல்லியாக கணித்து இலக்கை இந்த ஆளில்லா விமானம் தாக்கும். அப்படி தாக்கும் போது அதில் உள்ள குண்டுகள் சிதறி அந்த பகுதிகளில் பெரும் சேதம் விளைவிக் கும். தீவிரவாதிகள் பதுங்கி இடங்கள் தரை மட்டமாக்கப்படும். தீவிரவாதிகள் கொல்லப்படுவர். கடந்த நவம்பர் 1ம் தேதி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹகிமுல்லா கொல்லப்பட்டார். தீவிரவாதிக ளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலிபான் அமைப்புடன் சமரச பேச்சு நடத்தி வரும் நிலையில் தாக்குதலை நிறுத்தி வைக்க அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரி வந்த நிலையில் நேற்று அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது அதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்ஹுவா மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கிஇருப்பது அறிந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் ஊருக்குள் பதுங்கியதால், இலக்கு மாறியது. ஹென்கு மாவட்டத்தில் உள்ள தால் என்ற பகுதியை குறிவைத்து நேற்று அதிகாலை 5 மணிக்கு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் 8 பேர் கொல்லபப்பட்டனர். 50 பேர் காயடைந்தனர்.  பிரதமர் நவாஸ் ஷெரீப் பாதுகாப்பு ஆலோசகர் சர்டெஜ் அசிஸ், செனட் சபையில் நேற்றுமுன்தினம் பேசும் போது, அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தாது  என்று உத்தரவாதம் அளித்துள்ளது என்று கூறியிருந்த நிலையில் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

You may also like ...

அமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி!

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற

தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது!

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற

புதிய தொகுப்புகள்