10 வயது சிறுவனின் காம வேட்டை! யார் காரணம்?

இங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் 10 வயதாக இருக்கும் போதே, 6 வயது சிறுமியை கற்பழிக்க தொடங்கி உள்ளான்.

இன்டர்நெட்டில் ஆபாச படங்களை பார்த்து இவ்வாறு செய்து வந்துள்ளான்.

இந்த விவரம் வெளியே தெரியவரவே, சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

விசாரணையில், சிறுவனின் வீட்டில் பாலியல் விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்துள்ளது.

அதாவது சிறுவன் தனது தாயார் பாலியல் உறவுகளைக் கொள்வதை பலமுறை நேரில் பார்த்துள்ளானாம்.

அவனது தாயாரும், தனது மகன் ஆபாசப் படங்கள் பார்ப்பதை பலமுறை பார்த்துள்ளாராம், இருப்பினும் அதை தடுக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

இந்த சிறுவன் 9 வயது முதலே ஆபாசப் படங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளான்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், மிகவும் மோசமான பெற்றோரின் அன்பு இந்த சிறுவனுக்குக் கிடைத்துள்ளது.

பெற்றோர் மிகவும் பொறுப்பற்றத்தனமாக நடந்துள்ளனர், இது இந்த சிறுவனின் தவறு கிடையாது.

பெற்றோர்களின் அலட்சியமே இதற்குக் காரணம், இது மிகவும் வருத்தம் தருகிறது.

இதனால் தான் அவன் தவறான வழிக்கு போயுள்ளான்.

எனவே இவனுக்கு தண்டனை கொடுப்பதை விட சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பது தான் சரியானதாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுவனை சிறப்பு சீர்திருத்த இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

You may also like ...

நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா

2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புத பானம்!

இன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே

புதிய தொகுப்புகள்