2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்!

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்கிறது.

அதே சமயம் இந்த சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும்.

இந்த சட்டத்திருத்தம் சீசீக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் இராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.

சீசீ, 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின் கடந்த வருடம் வரும் 97% ஓட்டுக்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(Date: 17.04.2019)

You may also like ...

iPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்

டோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்!

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி

புதிய தொகுப்புகள்