ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 9 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் இரண்டு இடங்களில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வாபஸ் பெற்று வரும் நிலையில் உள்நாட்டு பாதுகாப்பை கண்காணிக்கும் பணி போலீசார் மற்றும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசார், ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால் ராணுவம் மற்றும் போலீசாரின் ரோந்து வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சாலையோர கண்ணி வெடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் ஏராளாமான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் வீட்டின் அருகே குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச்செய்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உடல் சிதறி பலியானார்கள். மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அதேபோல் ஷபுல் மாகாணம் தென்பகுதியான குவாலாட்டில் ஒரு குடும்பத்தினர் ஷாப்பிங் செய்ய வண்டியில் புறப்பட்டு சென்றனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி குண்டு வெடித்ததில் குழந்தைகள் 2 பேர் இறந்தனர்.இந்த குண்டு வெடிப்பு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற சாலையோர கண்ணி வெடி தாக்குதலில் கடந்த 10 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்

இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதம

நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா

புதிய தொகுப்புகள்