தேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்!

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

"ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது." என்று தெரிவித்தார் அமித் ஷா

பாஜக தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள்:

அடுத்த வருடத்திற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும், முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டுவந்து முஸ்லிம் பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் ஆகிய சில வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக காங்கிரஸ் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும், பள்ளிக் கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

(Date: 09.04.2019)

You may also like ...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப

புதிய தொகுப்புகள்