உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்பட்ட ஓவியம்

பிரிட்டன் ஓவியர் பேகான் வரைந்த ஓவியமொன்று சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான்.

இவர் கடந்த 1969ம் ஆண்டு, தனது நண்பர் லூசியான் பிராய்டை மாடலாக கொண்டு மூன்று ஓவியங்களை வரைந்தார்.

மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

நேற்று நியூயார்க் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்ட இந்த ஓவியம் அதிகபட்சமாக 85 மில்லியன் டொலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏலத்தின் தொடக்கமே 80-மில்லியன் டொலரில் தான் ஆரம்பித்தது.

ஏலம் தொடங்கிய 6 நிமிடத்திலேயே சுமார் 127 மில்லியன் டொலருக்கு ஓவியம் ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த ஓவியத்தின் மதிப்பு கமிஷன் தொகையுடன் சேர்ந்து 142 மில்லியன் டொலர் ஆகும்.

இந்த ஓவியமே உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்பட்ட ஓவியமாக புதிய சாதனை புரிந்துள்ளது.

You may also like ...

வர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்!

கால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்

தொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் !

தொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,

புதிய தொகுப்புகள்