சூடானில் குண்டு வெடித்ததில் 8 சிறுவர்கள் பலி!

சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர்.

பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

(Date: 25.03.2019)

You may also like ...

அமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி!

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற

விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி!

சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு தெ

புதிய தொகுப்புகள்