×

Error

There was a problem loading image resize_20110808105501-270x170.jpg

தென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லாரி மோதி 29 பேர் பரிதாப பலி

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர்.தென் ஆப்பிரிக்க தலைநகர் பிரெட்டோரியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று ம்புமலங்கா மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

பிரெட்டோரியாவில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள க்வகஃபான்டெய்ன் என்ற இடத்தை அந்த பஸ் நெருங்கியபோது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி பயங்கர சத்தத்துடன் பஸ் மீது மோதியது.

நிலைகுலைந்த பஸ் சாலையோரத்தில் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளில் 26 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

You may also like ...

20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை!

போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ

கொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ

புதிய தொகுப்புகள்