நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கபட்டன. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதையடுத்து, நிலச்சரிவில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

(Date: 18.03.2019)

You may also like ...

IPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண

IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு

புதிய தொகுப்புகள்