தலிபானின் புதிய தலைவர்

பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக முல்லா பசுலுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்வாட் பிராந்தியத்தில் இருந்து இயங்கி வரும் பசுலுல்லா, மிகத் தீவிரமான தாக்குதல்களில் பங்கேற்றவர்.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவைச் சுடுவதற்கு உத்தரவிட்டவர் இவர்தான் என்றும் கருதப்படுகிறது.

இதுவரை தலைவராக இருந்த ஹக்கிமுல்லா மசூத் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து இந்த நியமனம் நடந்துள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள பசுலுல்லா, மசூது இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், அந்த இனத்தைச் சேர்ந்த தலிபான் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

You may also like ...

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ

புதிய தொகுப்புகள்