17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா

புதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட் உட்பட நிதி மசோதாக்களுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் அளித்து விட்டது.  17 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இந்த 16 நாளில் ஒபாமா அரசு, தன் கடன் பத்திரங்களை அடகு வைத்து சமாளித்து வந்தது. இதற்கு பின்னும் கடன் வாங்கினால் பல மடங்கு வட்டியை பத்திரங்களை வாங்கிய  தனியார் நிறுவனங்களுக்கு தர வேண்டிய கட்டாயம். 

இதனால் ஒபாமா அரசும், ஆளும் ஜனநாயக கட்சி தலைவர்களும் பேச்சு நடத்தி, நள்ளிரவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டனர். அதன்படி, ஆளும் ஜனநாயக கட்சி பலமிக்க செனட் சபையில் 81:18 என்ற வித்தியாசத்தில் மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன. அடுத்து, எதிர்கட்சியான குடியரசு கட்சி பலமிக்க பிரதிநிதிகள் சபையில் 285: 144 கணக்கில் மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
இதன் பலனாக...

* ஒபாமா நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு அலுவலங்கள், நினைவிடங்கள், பூங்காக்கள், நயகரா நீர்வீழ்ச்சி போன்ற பொது இடங்கள் நிர்வாகம் போன்றவை மீண்டும் உயிர் பெற்றதால் 8 லட்சம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலைக்கு திரும்புகின்றனர்.
* ஜனவரி 15ம் தேதி வரை தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, கடன் வாங்க அனுமதி பிப்ரவரி 7ம் தேதி வரை தரப்பட்டுள்ளது. மீண்டும் அப்போது ஒப்புதல் பெற வேண்டும்.
* 17 லட்சம் கோடியை தாண்டி கடன் வாங்க அனுமதி கிடைத்துள்ளது என்றாலும், மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அரசு கஜானாவில் மீண்டும் டாலர் குவியும்.
* வாங்கிய கடனுக்கு இம்மாத இறுதிக்குள் கட்ட வேண்டிய வட்டி மட்டும் 6 ஆயிரம் கோடி டாலர்.  
* கஜானாவில் உள்ள ரொக்க கையிருப்பு 28000 கோடி டாலர். இம்மாத இறுதியில் செலவு மட்டும் 6 ஆயிரம் கோடியை தாண்டும் என்று நிதி துறை கணக்கிட்டுள்ளது.
* சுகாதார காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்ய ஒபாமா ஒப்புக்கொண்டதால் தான் உடன்பாடு ஏற்பட்டது.
  உடன்பாடு ஏற்பட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், 17 நாள் கதவடைப்பு நீங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் இன்று வேலைக்கு திரும்ப உள்ளனர். ஆனால், அவர்களுக்கு சம்பளம், சலுகை படி போன்றவை தான் தாமதம் ஆகும்  என்பது மட்டும் நிச்சயம்.

You may also like ...

இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

WhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது!

வாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண

புதிய தொகுப்புகள்