இராக்கில் குண்டு வெடிப்பு: 36 பேர் மரணம்

இராக்கில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.பாக்தாதின் தென்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக மையமான ஹில்லா நகரில் வர்த்தக வளாகம் மற்றும் பேருந்து நிலையங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.

சுவாய்ரா பகுதியில் நிகழ்ந்த மற்றொரு கார் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். குத் நகரில் இதேபோல் இரண்டு கார் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டதுடன். 16 பேர் காயமடைந்தனர். சமாவா பகுதியிலும், திவானியா நகர் பகுதியிலும் இரண்டு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தன. இவற்றில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த 17 பேருக்கு மெüன ஊர்வலம் செல்வதற்காக சமரா நகரில் மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

பாஸ்ரா, முகமதியா மற்றும் மடெய்ன் பகுதிகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 34 பேர் காயமடைந்தனர். பாக்தாத் மேற்கு பகுதியில் கடை வீதியில் கார் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

பாக்தாத் புறநகர் பகுதியான நார்வான் பகுதி கால்பந்து மைதானத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்களில், அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இராக்கில் ஷியா பிரிவு மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த இன ரீதியான தாக்குதலை தடுத்த நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You may also like ...

அமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி!

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற

சூடானில் குண்டு வெடித்ததில் 8 சிறுவர்கள் பலி!

சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவ

புதிய தொகுப்புகள்