அல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்

மலேசியாவில் மலே மொழி பேசும் சிறுபான்மை கிறித்தவர்களால் அதிகம் பாவிக்கப் படும் வார்த்தையான 'அல்லாஹ்' இனை அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பத்திரிகைகள் பாவிப்பதற்கு உரிமை கிடையாது எனவும் முஸ்லிம்கள் மட்டுமே இச்சொல்லினைப் பாவிக்க முடியும் எனவும் திங்கட்கிழமை மலேசிய நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சிறுபான்மை சமூகத்தினரிடையே மத சுதந்திரம் மறுக்கப் பட்டு வரும் நிலை அதிகரித்து விடும் என குறித்த சமூகங்கள் கவலை கொண்டுள்ளன. அரபு மொழியில் அடங்கியிருக்கும் அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே காணப்பட்டது என்றும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்வார்த்தையைத் தாம் பயன்படுத்தி வருவதாகவும் கூறும் மலேசியக் கிறித்தவர்கள் இத் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மலேசிய அரசின் இந்த முடிவு அந்நாட்டில் அரசியல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக இஸ்லாம் வளர்ந்து வருவதுடன் ஏனைய மதங்கள் மீதான அடக்குமுறையையும் வளர்க்கத் தூண்டு கோலாய் அமையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இதேவேளை அல்லாஹ் எனும் வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்றும் முஸ்லீம்களைத் தவிர ஏனையோர் இவ் வார்த்தையைப் பயன்படுத்த அனுமதிப்பது சமூகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

ஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்!

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும

ஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த டீ மட்டுமே போதும்!

வெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது

புதிய தொகுப்புகள்