சிரியாவில் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்

சிரியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் ஆறு பேர் ஆயுத முனையில் துப்பாக்கி தாரி ஒருவரினால் கடத்தப்பட்டுள்ளனர்.

சார்மின் எனும் நகரிலிருந்து சாரெகெப் நகருக்கு சென்று கொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கிய குறித்த ஆயுத தாரி வாகனத்தை இடைநிறுத்தி குறித்த பணியாளர்களை கடத்தியுள்ளதாகவும், ஆயுத தாரியுடன் தொடர்பு எதனையும் மேற்கொள்ள முடியாது இருப்பதாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

சிரியாவில் யுத்ததினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான மருத்துவச் சேவையை செய்வதற்காக உள்ளூர், சர்வதேச சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குறித்த ஆறு பேர் கொண்ட செஞ்சிலுவைக் குழு இரவு பகல் பாராது, அயராது தனது பணியை செய்து வந்ததாகவும் அவர்களை கடத்தியுள்ளதன் மூலம், அவர்களது சேவையை கிடைக்க வேண்டிய நூற்றுக்கணக்கான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும்  செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் உடனடியாக அந்த ஆறு பேரையும் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி விடுவிக்குமாறும் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.  சிரியாவில் கடந்த 2011 இலிருந்து தொடரும் யுத்தத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவிக்கிறது. இவர்களில் சிரிய, அரேபிய செம்பிறை சமூக அமைப்பை சேர்ந்த பணியார்கள் மாத்திரம் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

You may also like ...

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்!

ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்!

பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்

புதிய தொகுப்புகள்