தலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை தலைவர் லத்தீப் மசூத் ஆப்கன் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறது. இவரது கைது குறித்து தலிபான் இயக்கமும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. கைது குறித்து அறிந்ததாகவே ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு தெக்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் துணை கமாண்டராக இருப்பவர் லத்தீப் மசூத் (வயது 32) . பாகிஸ்தானில் உள்ள வஜிரிஸ்தானை சேர்ந்தவர். இவர்,தலைமை பொறுப்பு வகிக்கும் ஹக்கிமுல்லா மசூத்தின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். ஹக்கிமுல்லா வின் ரகசிய நபர்கள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர்களுடன் பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளே லத்தீப்பே ஏற்பாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஆப்கன் பகுதியான கோஸ்ட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க உள்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறு22யில்: லத்தீப் கைது செய்யப்பட்டிருப்பது உண்மை தான். கடந்த 2010 ல் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ்ஸ்கொயர் மீது தாக்குதல் நடத்த இந்த அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். பாகிஸ்தானில் எங்களின் அதிகாரிகளையும், எண்ணற்ற பாகிஸ்தானியர்களையும் இந்த அமைப்பினர் கொன்றிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like ...

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு!

அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1

புதிய தொகுப்புகள்