ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியைப் பிடிக்க தீவிரவாதிகள் முயற்சித்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம்பெற்றுள்ளது.
எனவே இங்கிலாந்து விமானப் படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானியாக அவர் பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த தலிபான், முஜாகுதீன் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அவர் அழித்தார். பின்னர் அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு அறித்த பேட்டியில் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த ஹாரி தான் எங்களது முதல் இலக்கு. அவரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி குறி வைத்தோம். இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால் அவர் தப்பி விட்டார். இளவரசர் ஹாரி இங்கிலாந்துக்கு வேண்டுமானால் இளவரசராக இருக்கலாம். ஆனால் எங்களைப் பொருத்தவரை அவர் சாதாரண ராணுவ வீரர்தான் என்று நஸ்ருல்லா கூறினார்.