அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்

அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள். அமெரிக்க ராணுவ படைக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு டிஹெச் 8 என்ற சிறிய ரக விமானம் நேற்று கொலம்பியா வழியாக சென்றது.

இதில் பைலட் உள்பட 6 பேர் இருந்தனர். பனாமா எல்லை பகுதி கொலம்பியா கபூர்கானா நகரம் அருகே அதிகாலை 1 மணியளவில்  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென பழுதாகி விழுந்து நொறுங்கியது.

இதில் அமெரிக்கர்கள் 4 பேர் பலியானார்கள். 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் பொகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் கொலம்பிய ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது மர்மமாக உள்ளது. கொலம்பியா தீவிரவாதிகள் யாராவது விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

You may also like ...

அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது!

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி

எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி!

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ

புதிய தொகுப்புகள்