வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கபிடல் ஹில்லை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த காரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் குறிவைத்தனர் அதிரடிப் படையினர். ஆனால் அதை பொருட்படுத்தாது அவர்களிடமிருந்து நழுவிய கார் அங்கிருந்து வேகமாக புறப்பட, துரத்திச்சென்று சுட்டனர் பொலிஸார். இதன் போது குறித்த பெண் கொல்லப்பட்டுள்ளதாகவும், காரிலிருந்து ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று எவ்வித காயங்களுமின்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அருகில் வெள்ளை மாளிகை இருந்ததால், செனட்சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அப்பகுதியில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்டுள்ளனர். குறித்த பெண்ணின் வீடு என நம்பப்படும் ஸ்டாம்ஃபோர்ட்டில் உள்ள ஒரு வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பெண் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. எனினும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் இரு நபர்கள் காயமடைந்துள்ளார்.

You may also like ...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப

உலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ!

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற

புதிய தொகுப்புகள்