அமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக வளாகத்தின் கேட்டுகள் மீது பெண் வாகன ஓட்டி ஒருத்தி தனது வாகனத்தை மோதி,பின்னர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றபோது தொடங்கியது என்று போலிசார் கூறினர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் இது பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்பு கொண்டது அல்ல என்றும் அதிகாரிகள் கூறினர். இந்த காரை போலிசார் விரட்டிய போது ஒரு போலிஸ்காரர் காயமடைந்தார்.

ஒரு சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று போலிசார் கூறினர். அவரது நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தகவல் ஏதும் தரப்படவில்லை. நாடாளுமன்ற வளாகம் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்தது தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்தப் பகுதியில் பலத்த போலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருக்கிறது.  அருகே இருக்கும் ஒரு கடற்படை தளத்தில் கடுமையான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் வருகிறது.

You may also like ...

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு!

அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1

புதிய தொகுப்புகள்