இனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது:இஸ்ரேல் அதிபர்

ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் இனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாஹூ கூறியுள்ளார். ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி தனது பதவிக் காலத்தில் அணுசக்தியைக் கொண்டு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என்று உறுதி கூறினார்.

மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் இருநாடுகளுக்கும் புதிய உறவு மலர்வதற்கு விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கூறுகையில், "ஈரான் அதிபரின் இனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது; இஸ்ரேலுக்காக அல்ல; ஒட்டுமொத்த உலக நாடுகளின் அமைதிக்காக இதனைக் கூறுகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

 

You may also like ...

அமெரிக்காவின் பிரதி சட்டமா அதிபர் இராஜினாமா!

அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்டெய்ன் (

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு

தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்

புதிய தொகுப்புகள்