தாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 170 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 366 பேருடன் பயணித்த குறித்த ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.