நைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி

நைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளதாக ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

கஸுவான் மாகனி நகரில், பாரம் தூக்குபவர்கள் இடையே இஸ்லாமிய மற்றும் கிறிஸ்ததவ இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாநிலத்தின் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானதொரு விடயமாகும்.

இந்தநிலையில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நல்லிணக்கம் இல்லாது, எமது அன்றாட வர்த்தகத்தை அடைய முடியாது என ஜனாதிபதி முஹம்மது புஹாரி குறிப்பிட்டுள்ளார்.

You may also like ...

நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா

எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி!

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ

தற்போது படிக்கப்பட்டவை!

புதிய தொகுப்புகள்