சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.
அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸி. அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

 சச்சின் ஓய்வு விவகாரம் குறித்து, சந்தீப் பாட்டீல் எதையும் கூறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் சில சிக்கல் ஏற்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை இடைப்பட்ட பயணமாக பிசிசிஐ இந்தியாவுக்கு அழைத்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரான நிலையில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் சந்தீப் பாட்டீல் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

புதிய தொகுப்புகள்