Language :     Englishதமிழ்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து 123 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது ஜேசன் ராய் 60 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து 106 ஓட்டங்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

306 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்கள் நிக்கோலஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், மார்டின் கப்தில் 8 ஓட்டங்களிலும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பின் இறங்கிய தலைவர் வில்லியம்சன் 27 ஓட்டங்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் அடித்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

(Date: 04.07.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று இடம்பெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா சார்பாக டேவிட் வோனர் மற்றும் அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 16.4 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

 1. World cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!
 2. இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!
 3. உலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!
 4. உலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
 5. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்!
 6. 12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!
 7. ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி!
 8. இலங்கை முதலில் துடுப்பாட்டம்!
 9. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு!
 10. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை
 11. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை!
 12. T20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC
 13. உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை
 14. மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு!
 15. இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்!
 16. IPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி!
 17. இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்!
 18. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்!
 19. IPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!
 20. 5000 மீட்டர் ஓட்டத்தில் காஸ்டர் சிமென்யா முதலிடத்தைப் பிடித்தார்!
 21. IPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி!
 22. வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி
 23. IPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!
 24. உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
 25. IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
 26. திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு!
 27. IPL 2019: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!
 28. இன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்!
 29. IPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!
 30. IPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி
 31. IPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்!
 32. முதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு!
 33. IPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI!
 34. IPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB!
 35. திமுத் கருணாரத்னவிற்கு அபராதம் விதிப்பு!
 36. IPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி!
 37. IPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி!
 38. இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!
 39. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது!
 40. IPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை!

புதிய தொகுப்புகள்