இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 139 ஓட்டங்களையும், பிரித்வி ஷா 134 ஓட்டங்களையும், ரவீந்திர ஜெடஜா ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, பொலோ வன் முறை மூலம் மீண்டும் தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தலைவர் விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த வருடத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள விராட் கோலி, 4 சதங்கள், 4 அரைச்சதங்கள் உட்பட ஆயிரத்து 18 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.