இலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அவசியம்

ஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர் வீராங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களை தயாரிப்பது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விளையாட்டு, கல்வி, உயர்கல்வி, இளைஞர் விவகார அமைச்சுக்கள் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என தெரிவித்த பிரதமர், விளையாட்டுத்துறையின் மேம்பாடு கருதி நாடெங்கிலும் சகல வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு நிலையங்களை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

பிரதான பாடசாலைகளை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த மத்திய நிலையங்களை ஏனைய பாடசாலைகளுக்கும் பயன்படுத்த முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை விளையாட்டு விழாவை நாட்டுக்கு அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிரதமர் கல்வியமைச்சராக இருந்த போது கல்வித்துறைக்கென பல்வேறு எண்ணக்கருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

You may also like ...

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2

ஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்ப

புதிய தொகுப்புகள்