சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விளையாட்டு விழா

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே நல்லண்ணெம், பரஸ்பரம், புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உத்தியோகத்தர்களை மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய இல்லங்களாக பிரித்து இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

இல்லத் தலைவர்களாக நிதி உதவியாளர் எம்.எம்.முஹம்மட் சிவப்பு இல்லத்திற்கும்,சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் அல்-ஹாஜ். ஏ.சீ.ஏ.நஜீம் நீல இல்லத்திற்கும், கிராம உத்தியோகத்தர் எல்.நாஸர் மஞ்சள் இல்லத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்ச்சியான கெரம் போட்டி நிகழ்ச்சியினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் வைபவ ரீதியாக அன்மையில் ஆரம்பித்து வைத்தார்.

இவ்வில்ல விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர், கிரிக்கெட், வலைப்பந்து, சைக்கிள் ஓட்டம், சிறந்த இல்லம், கயிறு இழுத்தல் போன்ற போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

போட்டி நிகழ்ச்சிகள் சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றன.

இந்த சுற்றுப்போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் விரைவல் நடைபெறவுள்ளது. இதற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

( எஸ்.அஷ்ரப்கான் )

 

You may also like ...

இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை!

சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4

இளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற

இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத

புதிய தொகுப்புகள்