×

Error

There was a problem loading image News+Hunt.png

சிஎல் டி20 இன்று கோலாகல தொடக்கம்

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது.

மும்பை, ராஜஸ்தான், சென்னை உட்பட மொத்தம் 8 அணிகள் ஏற்கனவே பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் சன்ரைசர்ஸ், பைசலாபாத், ஒடாகோ, மரூன்ஸ் ஆகிய 4 அணிகள் தகுதி சுற்றில் விளையாடின. இதில் சன்ரைசர்ஸ், ஒடாகோ அணிகள் சிறப்பாக விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து, பிரதான சுற்றில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அனுபவ வீரர் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் களமிறங்கும் கடைசி தொடர் இது என்பதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ளதால், இப்போட்டி கடைசி பந்துவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அக். 2ம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அக். 4 மற்றும் 5ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும், 6ம் தேதி இறுதிப் போட்டியும் நடக்க உள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ஸி16 கோடி காத்திருக்கிறது.

 

You may also like ...

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய

புதிய தொகுப்புகள்