இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
42.5 ஓவர்களில் 06 விக்கட் இழப்புக்கு 246 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பெஹலுக்வாயே (Phehlukwayo) மற்றும் இங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து 245 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 42.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி 2-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.