ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.
அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸி. அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், அவர் தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார். எனினும், முழு உடல்தகுதி இருந்தால் மட்டுமே கிளார்க் களமிறங்குவார் என்று  ஆஸி. தேர்வுக் குழு தலைவர் ஜான் இன்வெராரிடி கூறியுள்ளார்.

இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், சுழற்பந்துவீச்சாளர் பவாத் அகமது ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அந்த தொடரில் ஆஸி. அணி 2,1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய தொடருக்கு மொத்தம் 14 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர் டேரன் லீமேன் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க உள்ளதால், அவருக்கு பதிலாக ஸ்டீவ் ரிக்சன் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: மைக்கெல் கிளார்க் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி (துணை கேப்டன்), நாதன் கோல்ட்டர் நைல், சேவியர் தோஹர்டி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின் (விக்கெட் கீப்பர்), மோசஸ் ஹென்ரிக்ஸ், பிலிப் ஹியூஸ், மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்கே, ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

 

You may also like ...

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை!

365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி

இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்!

இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி

புதிய தொகுப்புகள்