Language :     Englishதமிழ்

சச்சின் ஓய்வு விவகாரம் சந்தீப் எதுவும் கூறவில்லை

 சச்சின் ஓய்வு விவகாரம் குறித்து, சந்தீப் பாட்டீல் எதையும் கூறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் சில சிக்கல் ஏற்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை இடைப்பட்ட பயணமாக பிசிசிஐ இந்தியாவுக்கு அழைத்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரான நிலையில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் சந்தீப் பாட்டீல் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

அப்போது, தன்னுடைய 200வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரது திறமையின் அடிப்படையிலேயே பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சந்தீப் பாட்டீல் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த செய்திக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரி ராஜிவ் சுக்லா கூறியதாவது: சச்சினின் ஓய்வு விவகாரம் குறித்து சந்தீப் பாட்டீல் கருத்து தெரிவித்ததாக வெளியான செய்திகள் தவறானது. இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பேசினோம். ஆனால், இதுபோன்ற எந்த ஆலோசனையும் தங்களிடையே நடக்கவில்லை என்று இருவரும் தெரிவித்தனர்.

சச்சின் டெண்டுல்கரை சந்திப்பது தமக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும், கடந்த 10 நாட்களாக அவரை சந்திக்கவே இல்லை என்று சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், அவர் எப்படி ஓய்வு விவகாரம் தொடர்பாக சச்சினிடம் ஆலோசித்து இருக்க முடியும்? இதனால் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

 

You may also like ...

12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக சொலமன் மிரே அறிவிப்பு!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸிம்பாப்வே

புதிய தொகுப்புகள்