உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 2 - 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.