மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் சந்திமால் 44 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 04 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கட்டுக்கு 414 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 360 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.