ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய மர்ரே 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
களிமண் தரை மைதானங்களில் 2வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ள அவர், ஜோகோவிச்சுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தார். கிளே கோர்ட் போட்டிகளில் ஜோகோவிச்சுடன் 5 முறை மோதியதில், மர்ரே முதல் முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.