இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணிக்காக ஆடி வரும் சங்கக்காரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 171 ஓட்டங்களை குவித்த சங்கக்காரா, 2வது இன்னிங்சிலும் 71 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இந்தப் போட்டியில் அவர் மொத்தமாக 242 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
3 நாட்களை கொண்ட இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.