இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டக்வர்த் லூயிஸ் அடிப்படையில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 101 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை காரணமாக போட்டி தடைப்பட்டது.
மேலும், 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன் இங்கிலாந்து அணி 39 ஒவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கெரி பெலன்ஸ் 64 ஓட்ட்களையும் இயன்பெல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சச்சித்ர சேனாநாயக்க 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு 32 ஓவர்களில் 226 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 27 . 5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களையே பெற்று இலங்கை அணி தோல்வியைத் தழுவிக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் மஹேல ஜயவர்தன பெற்ற 35 ஓட்டங்களே அணி சார்பில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.
பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பாக ஜேம்ஸ் ட்ரெட் வெல் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்பிரகாரம் ஐந்து போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ச்செஸ்டர் லீ ஸ்டீரீட்டில் நடைபெறவுள்ளது.