சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த 6 ஆவது வீரர் மற்றும் உலகக் கிண்ண போட்டிகளில் , தனி நபராக அதிக ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமைகளை நியூசிலாந்தின் மார்டின் கப்டில் பெற்றார்.
உலகக் கிண்ண 4 ஆவது காலிறுதியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் கடைசிவரை களத்தில் நின்று 237 ஓட்டங்களை குவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல், நியூசிலாந்து வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்ததுள்ளது.