2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துக்களை ஸ்கைப் ஊடாக தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.