ஸ்கொட்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணி ஸ்கொட்லாந்தை 148 ஓட்டங்களால் அபார வெற்றியடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இலங்கை - ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண 'ஏ' பிரிவு லீக் போட்டி நடைபெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி சார்பாக சங்கக்கார 124 ஓட்டங்களையும் டில்ஷான் 104 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் 364 எனும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஸ்கொட்லாந்து அணி சார்பாக கொலிமேன் 70 ஓட்டங்களையும் மொம்மேசன் 60 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.