உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 33ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, பங்களாதேஷ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று திங்கட்கிழமை(09.02.2015) அடிலைடில் ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றது.
276 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது பங்களாதேஷ் அணி வீரர் என்ற சாதனையை மஹ்மதுல்லா படைத்மை குறிப்பிடத்தக்கது. அத்துடன் முஷ்விகூர் ரஹிம் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.